Find us on Facebook

Wednesday, September 14

கள்ளத்தொடர்பு நயன்தாரா வைத்திருந்தால் குற்றமில்லை, நிகிதாவுக்கு மட்டும் என் ஓரவஞ்சனை?

அந்தரங்க வாழ்க்கையில் ஒழுக்கம் முக்கியம் என்று கன்னட தயாரிப்பாளர்கள் சங்கம் பிரகடனம் செய்திருப்பதை கேட்டு அதிர்ந்து போயிருக்கிறது திரையுலகம். அதிர்ச்சியிலா ஆனந்தத்திலா என்பது உடனடியாக தெரியவில்லை. நடிகர் தர்ஷனின் குடும்ப சண்டையால் விளைந்த ஞானோதயம் அந்த அறிவிப்பு. உடன் நடிக்கும் கதாநாயகி நிகிதாவுடன் தர்ஷன் நெருக்கமாக பழகுவதை மனைவி விஜயலட்சுமி கண்டிக்க, வாக்குவாதம் வலுத்திருக்கிறது.

தர்ஷன் துப்பாக்கியை காட்டி தன்னையும் குழந்தையையும் மிரட்டியதாக போலீசில் புகார் கொடுத்தார் மனைவி. மகளிர் அமைப்புகள் அழுத்தம் கொடுத்ததால் தர்ஷன் கைதானார். தலைசுற்றுவதாக சொன்ன அவரை ஸ்பெஷல் வார்டில் சேர்த்துள்ளனர். அங்கு கணவனை பார்த்து பேசிய விஜயலட்சுமி, புகாரை வாபஸ் பெற்றிருக்கிறார். பின்னர் கர்நாடக தயாரிப்பாளர்கள் சங்கம் அவசரமாக கூடி, நிகிதா மூன்று ஆண்டுகள் கன்னட படங்களில் நடிக்க தடை விதித்து தீர்மானம் போட்டுள்ளது.

 அமைதியான குடும்பத்தில் தலையிட்டு புயலை ஏற்படுத்திவிட்ட நிகிதா மீது எடுக்கும் நடவடிக்கை மற்றவர்களுக்கும் பாடமாக இருக்க வேண்டும்� என கூறியிருக்கிறார் சங்க தலைவர் முனிரத்னம். படத்தில் நடிப்பதை தவிர தர்ஷனோடு தனக்கு எந்த உறவும் கிடையாது என்று நிகிதா மறுத்திருக்கிறார். என் தரப்பு என்ன என்று கேட்காமல் தடை விதிப்பது என் தொழிலை சீர்குலைக்கும் முயற்சி; அடிப்படை உரிமையை மீறும் செயல் என்று கொதிக்கிறார்.

கோடானு கோடி அதில் குளிப்போம் விளையாடி.. என்ற பாடல் காட்சி மூலம் தமிழிலும் பிரபலமான நிகிதா, தர்ஷன் மனைவியின் உரிமைக்காக குரல் கொடுத்த அதே மகளிர் அமைப்புகளின் ஆதரவை நாட இருக்கிறார்.

நடிகர்களின் இல்லற வாழ்க்கையில் இம்மாதிரி புயல் வீசுவது புதிய விஷயமல்ல. உலகம் முழுவதும் நடப்பது இங்கே கொஞ்சம் அதிகம். தமிழில் மவுனப்பட காலத்திலேயே தொடங்கிவிட்டது. லேட்டஸ்ட் பிரபுதேவா & ரமலத் & நயன்தாரா விவகாரம். நடிகை நிகிதாவுக்கு மட்டும் தடை விதித்த திரை உலகம், ஏனோ பிரபுதேவா & நயன்தாரா விவகாரத்தை மட்டும் கண்டு கொள்ளவேயில்லை. தனிநபர் ஒழுக்கம் மெச்சத் தகுந்தது. அதை காப்பாற்றும் குறிக்கோள் போற்றத் தக்கது. எனினும் ஒரு கை மட்டும் ஓசை எழுப்ப முடியாது. ஒருதரப்பான இத்தகைய நடவடிக்கைகள் ஆணாதிக்கத்தின் இன்னுமொரு அடையாளமாகவே விமர்சிக்கப்படும். 
kusumbu.com

No comments:

Post a Comment