Find us on Facebook

Sunday, September 18

ஐ.சி.சி ஒருநாள் போட்டிக்கான தரவரிசை : டோனி முன்னேற்றம்

இந்திய கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி 6-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
9-வது இடத்தில் இருந்த தோனி, இங்கிலாந்து தொடரில் 236 ரன்கள் குவித்ததன் மூலம் 3 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தைப் பிடித்துள்ளார். விராட் கோலி 3 இடங்கள் பின்தங்கி 9-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
இங்கிலாந்து தொடருடன் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற ராகுல் திராவிட் 118-வது இடத்தைப் பிடித்தார். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் 128 ரன்கள் குவித்ததன் மூலம் அவர் 3 இடங்கள் முன்னேறினார். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஒருநாள் போட்டியில் விளையாடாததே தரவரிசையில் திராவிடின் பின்னடைவுக்கு காரணம். இந்தியாவின் சுரேஷ் ரெய்னா 5 இடங்கள் முன்னேறி 30-வது இடத்தைப் பிடித்தார்.
துடுப்பாட்டத்தில் தென் ஆப்பிரிக்காவின் ஹசிம் ஆம்லா, டிவில்லியர்ஸ், அவுஸ்திரேலியாவின் வாட்சன் ஆகியோர் முறையே முதல் 3 இடங்களை தக்கவைத்துக் கொண்டுள்ளனர். இங்கிலாந்தின் ஜொனாதன் டிராட், இலங்கையின் சங்ககராவை பின்னுக்கு தள்ளி, 4-வது இடத்துக்கு முன்னேறினார்.
பந்துவீச்சில் இங்கிலாந்தின் ஸ்வான் முதலிடத்திலும், நியூசிலாந்தின் டேனியல் வெட்டோரி 2-வது இடத்திலும், அவுஸ்திரேலியாவின் ஜான்சன் 3-வது இடத்திலும் உள்ளனர். பாகிஸ்தானின் முகமது ஹபீஸ் 23-வது இடத்துக்கு முன்னேற்றம் கண்டுள்ளார். இந்தியாவின் முனாப் படேல் 6 இடங்கள் பின்னடைவைச் சந்தித்து 33-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

சகலதுறை ஆட்டக்காரர்களுக்கான தரவரிசையில் அவுஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். வங்கதேசத்தின் ஷகிப் அல்ஹசன் 2-வது இடத்தில் உள்ளார். பாகிஸ்தானின் முகமது ஹபீஸ் ஜிம்பாப்வே தொடரில் சிறப்பாக ஆடியதன் மூலம் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இதுவே தரவரிசையில் அவரின் அதிகபட்ச இடமாகும்.

No comments:

Post a Comment