Find us on Facebook

Friday, September 30

கணணி துறையினருக்கான கூகுளின் புதிய வசதி

இன்றைய கால கட்டத்தில் இணையம் என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த இணையம் இருப்பதால் எந்த ஒரு வேலையையும் எளிதாக செய்ய முடிகிறது.
கணிப்பொறி துறையில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் Programmers. இவர்கள் தான் மென்பொருட்கள், இணையதள வடிவமைப்பு இப்படி பல செயல்களுக்கு கோடிங் எழுதி உருவாக்குபவர்கள்.
ஆனால் இந்த கால கட்டத்தில் யாரும் முழு கோடிங்கையும் சொந்தமாக எழுதுவது இல்லை. அப்படி எழுதினாலும் வெகு நேரம் எடுக்கும் போன்ற சில காரணங்களால் இணையத்தில் இருந்து தான் கோடிங்கை எடுக்கின்றனர். அதில் அவர்களுக்கு தேவையான சில மாற்றங்கள் செய்து கோடிங்கை வடிவமைத்து கொள்கின்றனர்.

தீபாவளிக்கு முன்பே 'வேலாயுதம்'!

விஜய் நடிப்பில், 'ஜெயம்' ராஜா இயக்கியுள்ள 'வேலாயுதம்' படம் வரும் அக்டோபர் 25-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, அய்ங்கரன் நிறுவனம் வெளிநாடுகளில் வெளியிடுகிறது. தமிழகத்தில் ஆஸ்கர் பிலிம்ஸ் வெளியிடுகிறது. வெளிநாடுகளில் மட்டும் 400 திரையரங்குகள் வரை இந்தப் படத்துக்கு புக் செய்யப்பட்டுள்ளன.

நள்ளிரவில் '7ஆம் அறிவு' ட்ரெய்லர்

வெற்றிக்குதிரையில் சவாரி செய்யும் ஏராளமான சினிமாக்காரர்களுக்கு ராத்திரி பனிரெண்டு மணிக்கு மேல்தான் விடியும். ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், சிம்பு என லிஸ்ட் போட்டால் பட்டியலின் நீளம் தாங்காது. தமிழ் சினிமாவில் இப்படி ஏராளமான இரவு பறவைகள் இருக்கிறார்கள். தானும் அப்படி ஒரு இரவு பறவைதான் என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்

குரோம் உலாவியில் தரவிறக்க இடத்தை மாற்றுவதற்கு

இன்றைய இணைய உலகில் கூகுள் குரோம் உலாவி பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது.
கூகுள் குரோம் உலாவியில் Download Location மாற்றுவது எவ்வாறு? என்று பார்ப்போம். உங்கள் உலாவியை திறந்து மேலே சிவப்புக்கட்டமிட்ட பகுதியை

Wednesday, September 28

வந்தான் வென்றான் திரை விமர்சனம்

 ஜீவாவிடம் உயிரோடு ஊருக்கு ஓடிப்போ என நந்தா கோஷ்டி மிரட்ட போலீசிடம் பிடித்து கொடுக்காமல் போக மாட்டேன் என அவர் அடம் பிடிக்க சூடு பிடிக்கிறது. நந்தாவை வீழ்த்த தந்திரமாய் காய் நகர்த்துகிறார். போலீசை வைத்து தொழில் நிறுவனங்களை மூட வைத்து நிராயுதபாணியாக்குகிறார்.

கீரைகளை உணவில் சேர்ப்பதனால் ஏற்படும் நன்மைகள்

தேவையான வைட்டமின் சத்துக்களையும், தாதுப் பொருட்களையும் பெற ஒருவர் தினசரி 125 கிராம் கீரைகளையும், 75 கிராம் காய்களையும், பருப்பையும் சாப்பிட வேண்டும்.
முக்கியமான வைட்டமின் சத்துக்களையும் தாதுப்புக்களையும் நாம் கீரையிலிருந்துதான் எளிதாகப் பெற முடியும்.

VLC மீடியா பிளேயரில் புகைப்படம் எடுப்பதற்கு

கணணி உபயோகிக்கும் அனைவருக்கும் VLC மீடியா பிளேயரை பற்றி அறிந்திருப்போம். கணணியில் வீடியோ, ஓடியோ கோப்புகளை இயக்க உதவும் இலவச மென்பொருள்.
இந்த மென்பொருளில் ஏராளமான வசதிகள் உள்ளது மற்றும் இந்த மென்பொருள் வெறும் பிளேயராக மற்றும் இல்லாமல் சில மற்ற வசதிகளையும் கொண்டுள்ளது.
ஆனால் பெருமாலானவர்கள் அந்த வசதிகள் இருப்பது கூட தெரியாமல் அதற்கென தனித்தனி மென்பொருட்களை உபயோகித்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் இன்று இரண்டு வசதிகளை பற்றி பார்ப்போம்.

Tuesday, September 27

ஜிமெயில் தரும் புத்தம் புதிய வசதிகள்

கூகுள் குழுமத்திலிருந்து வெளிவரும் ஜிமெயில் புத்தம் புதிய வசதிகளை கொண்டிருக்கிறது.
இவற்றை எந்தக் கட்டணமும் இன்றி நாம் பெற முடியும். மெயில் செட்டிங்ஸ் பிரிவில் லேப்ஸ் தளத்தில் இவற்றை இயக்க செட் செய்திட முடியும். இதன் மூலம் நம் ஜிமெயில் பயன்பாட்டினை நம் விருப்பப்படி அமைக்க முடியும். அத்தகைய சில வசதிகளை இங்கு காணலாம்.

பயர்பொக்ஸ் 7.0 தரவிறக்கம் செய்வதற்கு

பயர்பொக்ஸ் உலாவியின் தற்போதைய பதிப்பான 6.0.2 சற்று மேம்படுத்தப்பட்ட பதிப்பாக தற்போது வெளிவந்துள்ளது.
இதில் மெமரி மிகவும் குறைவாக எடுத்துக் கொண்டு வேலை செய்யும் விதத்தில் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. 20 முதல் 30 சதவீதம் வரை குறைக்கப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள்.
அதிகபட்சம் 50 சதவீதம் இணையப்பக்கங்கள் லோடு ஆகும் வேகத்தை அதிகப்படுத்தியிருக்கின்றனர். நிறைய பாதுகாப்புகள் மேம்படுத்தப்படிருக்கின்றன.

Monday, September 26

கணணியின் செயல் வேகத்தை அதிகரிப்பதற்கு

கணணியை நிறுவியதும் சில மாதங்கள் நன்றாக, வேகமாக வேலை செய்தது. இப்போது என்ன செய்தாலும் கொஞ்ச நேரம் எடுத்த பின்னரே வேலையைத் தொடங்குகிறது என்ற குற்றச்சாட்டை பலரும் சொல்வதுண்டு.
உங்கள் கணணிக்கு உரமூட்ட அதனைத் தொடர்ந்து வேகமாக இயங்க வைத்திட சில எளிய வழிகளைக் காணலாம். அதற்கு இலவசமாய் உதவிடும் சில சாதனங்களையும் பார்க்கலாம்.

டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்

டீ பிரியர்கள் உலகம் முழுமையும் இருக்கிறார்கள். டீ சாப்பிடுவது நல்லதல்ல, பல்லில் கறைபிடிக்கும், பசியை குறைக்கும் என்றெல்லாம் பலர் சொல்வதுண்டு.
டீயில் உள்ள காபின் உடல் நலத்துக்கு நல்லதல்ல என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில் ஒரு கோப்பை காபியில் இருக்கும் காபினைவிட மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாகவே ஒரு கோப்பை டீயில் காபின் உள்ளது.
சரியான அளவில் காபின் எடுத்துக் கொண்டால் அது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. மன அழுத்தத்தை குறைக்கும், ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

AGPS பற்றிய சில தகவல்கள்

AGPS என்பது Assisted Global Positioning System என்பதாகும்.  இந்த வசதியானது கைத்தொலைபேசியில் தகவல்களை பெறுவதற்கு பயன்படுகிறது.
உங்கள் கைத்தொலைபேசியில் இணைய இணைப்பு வசதி இருந்து, அதனை இயக்கும் வசதியை உங்களுக்கு போனுக்கு இணைப்பு தரும் நிறுவனத்திடம் நீங்கள் பெற்றிருந்து அதனை இயக்கினால் சாட்டலைட் டிலிருந்து நிறுவனத்தின் சர்வர் வழியே உங்கள் கைத்தொலைபேசியில் தகவல்களைப் பெறலாம்.

Sunday, September 25

இலங்கையில் நடைபெறவுள்ள ஐ.சி.சி T20 உலக கிண்ண போட்டிகள்

அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐ.சி.சி இருபதுக்கு இருபது கிரிக்கெட் உலக கிண்ண போட்டிகள் 2012 ஆண்டு செப்டம்பர் 18ம் திகதி முதல் ஒக்டோபர் 7ம் திகதி வரை இலங்கையில் நடைபெறவுள்ளன.
இப்போட்டிகளில் இலங்கை அணி சி பிரிவில் விளையாட உள்ளதோடு பன்னிரெண்டு அணிகள் இப்போட்டிகளில் பங்கு பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் Subscribe வசதியை பயன்படுத்துவதற்கு

பேஸ்புக்(Facebook) நிறுவனம் தனது உறுப்பினர்களைத் தக்க வைக்க புத்தம் புதிய வசதிகளை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறது.
நாம் இப்போது பார்க்கப் போவது Subscribe வசதியைப் பற்றி. Subscribe என்றால் குறிப்பிட்ட நண்பர்கள் நமக்குப் பிடித்திருந்தால் நாம் அவர்களுக்கு நண்பராகச் சேரப்போவது இல்லை.
அவர்களது பப்ளிக்(Public) செய்திகள்/அப்டேட்கள் மட்டும் நமக்குத் தெரிந்தால் போதும். இதனால் Friend Request கொடுத்து தொல்லை செய்யத் தேவையில்லை. சப்ஸ்கிரைப் செய்வதன் மூலம் அவர்களின் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும்.

Saturday, September 24

சாம்பியன்ஸ் லீக் தொடர்: மும்பை இண்டியன்ஸ் அணி வெற்றி


சாம்பியன்ஸ் லீக் தொடரில் சென்னை மும்பை அணிகள் மோதும் 2வது போட்டி சென்னையில் நடைபெறுகிறது.   இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

பேஸ்புக்கின் புதிய தோற்றத்தை பெறுவதற்கு


பேஸ்புக் நிறுவனமானது பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் ஒன்று தான் timeline எனப்படும் பேஸ்புக்கின் புதிய தோற்றம்.
இந்த புதிய தோற்றம் கண்டிப்பாக அனைவரையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வசதியை இப்பொழுது Developer மட்டும் வழங்கி உள்ளது. அதை உங்கள் கணக்கிலும் அந்த புதிய மாற்றத்தை, தோற்றத்தை கொண்டு வரலாம்.

Friday, September 23

பவர்பாய்ண்ட் கோப்புகளை வீடியோவாக மாற்றம் செய்ய

கணணி துறையில் புகழ்பெற்று விளங்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வெளியீடு இந்த பவர்பாய்ன்ட் மென்பொருள்.
இந்த பவர்பாயின்டில் நாம் பல ஸ்லைடுகளை உருவாக்கி அதை மொத்தமாக ஓடவிட்டு பார்க்கும் போது அழகாக இருக்கும். இப்படி உருவாக்கும் பவர்பாய்ன்ட் கோப்புகளை வீடியோவாக மாற்ற ஒரு வழி உள்ளது.
வீடியோவாக மாற்றினால் அந்த கோப்பை சீடியில் கொப்பி செய்து டிவியில் பார்க்கலாம். நம்முடைய மொபைல் போன்களில் பார்த்து மகிழலாம். யூடுப் போன்ற வீடியோ தளங்களில் பகிர்ந்து கொள்ளலாம்.

எங்கேயும் எப்போதும்

விபத்தில் உயிரிழப்போரின் வாழ்க்கை பின்புலங்களை உருக்கமாய் அலசும் கதை...
 
திருச்சியில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஜெய், எதிர் வீட்டு அஞ்சலிக்கு காதல் வலை வீசுகிறார். அவரும் சம்மதம் சொல்கிறார். பெற்றோரிடம் அஞ்சலியை அறிமுகப்படுத்த அழைத்துக் கொண்டு பஸ்சில் விழுப்புரம் புறப்படுகிறார்.
 
அதே பஸ்சில் திருச்சிக்கு காதலியை தேடி வந்து கண்டு பிடிக்க முடியாத சர்வாவும் சென்னை திரும்புகிறார். சென்னையில் இருந்து திருச்சி செல்லும் பஸ்சில் அனன்யா காதலன் சர்வாவை தேடி வந்து கண்டுபிடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திருச்சிக்கு பயணிக்கிறார். இரு பஸ்களிலும் வெவ்வேறு ஆசை, ஏக்கம், கனவுகளுடன் நிறைய பயணிகள்.

சாம்பியன்ஸ் லீக் தொடக்க ஆட்டம்:கடைசி பந்தில் வாரியர்ஸ் அணி வெற்றி பெங்களூர் அணியை வீழ்த்தியது


சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் தொடக்க ஆட்டத்தில் வாரியர்ஸ் அணி கடைசி பந்தில் இலக்கை எட்டி, ஐ.பி.எல். அணியான பெங்களூர் ராயல் சேலஞ்சர்சுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.   3-வது சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா சென்னை, பெங்களூர், ஐதராபாத் ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது.
 
இந்த போட்டி பெங்களூரில் நேற்று தொடங்கியது. போட்டியில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. `ஏ' பிரிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் (இரு அணியும் இந்தியா), நியூ சவுத் வேல்ஸ் (ஆஸ்திரேலியா), கேப் கோப்ராஸ் (தென்ஆப்பிரிக்கா), டிரினிடாட் அண்ட் டொபாக்கோ (வெஸ்ட் இண்டீஸ்) ஆகிய அணிகளும், `பி' பிரிவில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (இரு அணியும் இந்தியா), வாரியர்ஸ் (தென்ஆப்பிரிக்கா), தெற்கு ஆஸ்திரேலியா (ஆஸ்திரேலியா), சோமர்செட் (இங்கிலாந்து) ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ENT பிரச்சனைகளுக்கான தீர்வுகள்

மழை, குளிர் காலம் தரும் அவஸ்தைகள் ஏராளம். சளி, தும்மல், இருமல், தலைவலி என்று பாடாய்படுத்தி விடும்.
குளிர் காற்று அதிகாலையில் வீட்டில் வேலைகளைத் துவங்கும் பெண்களை அதிகம் தாக்குகிறது. அதிகாலை எழுந்து படிக்கும் குழந்தைகளையும் தாக்கும்.
குளிர் காலங்களில் அதிகாலை நேரத்தில் வெளியில் நடமாட நேர்ந்தால் உல்லன் துணிகளால் காதுகளை நன்றாக மூடி கட்டிக் கொள்ளலாம். பஸ், பைக்கில் பயணிக்கும் போது இந்த ஐடியா சிறந்தது.

உங்களது கணணியை பாதுகாப்பதற்கு

கணணி பயன்பாட்டாளர்கள் அனைவருக்கும் தங்களது தகவல்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற கவலை இருக்கும்.
இதற்கு அனைவரும் உபயோகப்படுத்துவது ஆண்டிவைரஸ் மென்பொருளைத் தான். சில நேரங்களில் கணணியிலுள்ள ஆண்டிவைரஸ் மென்பொருளையும் மீறி வைரஸ் தாக்குதல் நடைபெறுகிறது.
இது போன்ற சந்தர்ப்பங்களில் பல பிரபலமான ஆண்டிவைரஸ் மென்பொருட்களை கணணியில் நிறுவி ஸ்கான் செய்யுமாறு பரிந்துரைக்கிறார்கள்.

Wednesday, September 21

சாம்பியன்ஸ் லீக் தகுதி சுற்று: லீசெஸ்டர்ஷைர் அணி வெளியேற்றம்


தொடர்ந்து 2 போட்டிகளில் தோல்வியை தழுவிய இங்கிலாந்தின் கவுண்டி அணியான லீசெஸ்டர்ஷைர் அணி, சாம்பியன்ஸ் லீக் தகுதி சுற்றுடன் நடையை கட்டியது.   10 அணிகள் பங்கேற்கும் 3-வது சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நாளை முதல் அக்டோபர் 9-ந்தேதி வரை சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் நடைபெறுகிறது.
 
இதில் விளையாட, சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், வாரியர்ஸ், கேப் கோப்ராஸ், நிï சவுத் வேல்ஸ், தெற்கு ஆஸ்திரேலியா ஆகிய 7 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன. மீதமுள்ள 3 அணிகளுக்கான இடத்திற்கு தகுதி சுற்று போட்டிகள் ஐதராபாத்தில் கடந்த மூன்று நாட்களாக நடந்தன.

சிறிய கோள்களில் காணப்படும் பாரிய கறுப்பு ஓட்டைகள்: ஆய்வாளர்கள் தகவல்

நமது வான்பகுதியில் பால்வீதி மண்டலம் எனப்படும் நட்சத்திர கூட்டங்கள் அதிகளவில் உள்ளன.
நமது பூமியிலிருந்து சிறிய தொலைவில் உள்ள பால்வீதி மண்டலத்தில் பெரும் திறள் கருப்பு ஓட்டைகள் இருப்பதை விண்வெளி ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
தொலைதூர பிரபஞ்சத்தை ஆய்வு செய்வதற்காக ஹப்பில் விண்வெளி நுண்ணோக்கியை பயன்படுத்தி ஆய்வாளர்கள் ஆய்வு செய்த போது சிறிய நட்சத்திர கூட்டங்களில் பெரிய கருப்பு ஓட்டைகள் வளர்வதை கண்டறிந்தார்கள்.

ஜிமெயிலில் தகவலுடன் படங்களை இணைத்து அனுப்புவதற்கு

மின்னஞ்சல் பயன்படுத்துவோர் அனைவரும் ஜிமெயில் அக்கவுண்ட் உள்ளவர்களாக இருப்பது இன்றைய நடைமுறை ஆகிவிட்டது.
இதனைப் பயன்படுத்தாதவர் கூட எதற்கும் இருக்கட்டும் என மின்னஞ்சல் கணக்கு ஒன்றை உருவாக்கி வைத்துக் கொள்கின்றனர்.
ஜிமெயில் பயன்படுத்துவோர் பலரும் சந்திக்கும் பிரச்சனைகள் பல. புகைப்படங்கள் மற்றும் படங்களை தங்கள் மின்னஞ்சலுடன் அனுப்ப விரும்புபவர்கள் அவற்றை இணைத்துத் தான் அனுப்புகின்றனர்.
அஞ்சலின் ஒரு பகுதியாக ஒட்டி அனுப்ப இயலவில்லை. செய்தியுடன் இணைத்து அனுப்புவதற்கு ஜிமெயில் தளத்தைத் திறந்து Gmail Labs செல்லவும்.(இதற்குச் சென்று அதிகப் பழக்கம் இல்லை என்றால் ஜிமெயில் அக்கவுண்ட்ஸ் செட்டிங்ஸ் சென்று அங்கு Labs என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும்.) இங்கு வரிசையாக நமக்கான வசதிகளை செட் செய்திட டூல்ஸ்கள் நீளக் கட்டங்களில் தரப்பட்டிருக்கும்.

புதிய வசதிகளுடன் கூடிய பயர்பொக்ஸ் 6 தரவிறக்கம் செய்வதற்

தன் பயர்பொக்ஸ் பிரவுசரில் பெரிய அளவில் மாற்றங்களுடன் பதிப்பு 6னை மொஸில்லா நிறுவனம் அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
பயர்பொக்ஸ் பதிப்பு 5 சென்ற ஜூன் 21ல் வெளியானது. பின்னர் இரண்டு மாதங்களுக்குள்ளாக இந்த புதிய பதிப்பு வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு 16 வாரங்களுக்கு ஒருமுறை புதிய பயர்பொக்ஸ் பிரவுசர் பதிப்பு வெளியிடப்படும் என்ற தன் வாக்குறுதியினை மொஸில்லா நிறுவனம் செயல்படுத்தியுள்ளது.
பயர்பொக்ஸ் 4 மார்ச் 22ல் வெளியானது. 12 வாரங்கள் கழித்து பயர்பொக்ஸ் 5 ஜூன் 21ல் வெளியானது. ஆகஸ்ட் 16ல் எட்டு வாரங்கள் கழித்து பயர்பொக்ஸ் 6 வெளியாகியுள்ளது.

இணைய இணைப்பு இல்லாமல் ஜிமெயிலை பயன்படுத்துவதற்கு

கூகுளின் ஜிமெயிலை அனைவரும் உபயோகிக்கிறோம் நாளுக்கு நாள் புது புது வசதிகளை அறிமுகபடுத்துவதால் அனைவரும் ஜிமெயிலை பயன்படுத்துகிறோம்.
அதில் ஏதாவது ஒரு நேரத்தில் நமக்கு ஏதேனும் முக்கியமான மின்னஞ்சல் வந்துள்ளதா என சோதிக்க வேண்டும் அல்லது யாருக்கேனும் முக்கிமாக ஒரு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் சரியாக அந்த நேரம் பார்த்து நம்முடைய கணணியில் இணைய இணைப்பு துண்டிக்கபட்டிருக்கும் அல்லது நாம் வேறு எங்காவது வெளியில் இருப்போம் மடிக்கணணியில் இணைய இணைப்பு இருக்காது. அது போன்ற சமயங்களில் நமக்கு உதவி செய்யவே கூகுள் ஒரு அருமையான வசதியை வெளியிட்டுள்ளது.

Tuesday, September 20

ஒருநாள் போட்டி தரவரிசை: இந்தியா 5-வது இடத்துக்கு பின் தங்கியது


இந்திய கிரிக்கெட் அணியின் இங்கிலாந்து பயணம் மிகவும் மோசமாக அமைந்தது. 4 டெஸ்டிலும் தோற்றதால் இந்திய அணி “நம்பர்1” இடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு பின்தங்கியது. தற்போது ஒருநாள் போட்டி தரவரிசையிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்தது.
 
இதனால் உலக சாம்பியனான இந்தியா 3-வது இடத்தில் இருந்து 5-வது இடத்துக்கு பின் தங்கியது. 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தான் இந்தியா தரவரிசையில் பின்தங்கி இருந்தது. தற்போது அந்த நிலைக்கு மீண்டும் திரும்பிவிட்டது. ஆஸ்திரேலியா 130 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இலங்கை 119 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், தென்ஆப்பிரிக்கா 116 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளன. இந்தியாவுக்கு எதிரான தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியதால் இங்கிலாந்து 113 புள்ளிகளுடன் 4-வது இடத்துக்கு முன்னேறியது.

லீசெஸ்டர்ஷைர் அணியை எளிதாக வீழ்த்தியது: சாம்பியன்ஸ் லீக் பிரதான சுற்றுக்கு தகுதி பெற்றது, டிரினிடாட் அணி


லீசெஸ்டர்ஷைர் அணியை வீழ்த்தியதன் மூலம் டிரினிடாட் அண்ட் டொபாக்கோ அணி சாம்பியன்ஸ் லீக் சுற்றின் பிரதான சுற்றில் விளையாட தகுதி பெற்றிருக்கிறது.   10 அணிகள் பங்கேற்கும் 3-வது சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் போட்டி வருகிற 23-ந்தேதி முதல் அக்டோபர் 9-ந்தேதி வரை சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் நடைபெறுகிறது.
 
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், வாரியர்ஸ், கேப் கோப்ராஸ், நிï சவுத் வேல்ஸ், தெற்கு ஆஸ்திரேலியா ஆகிய 7 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 3 அணிகளுக்கான இடத்திற்கு தகுதி சுற்று ஆட்டங்கள் ஐதராபாத்தில் நடந்து வருகிறது. தகுதி சுற்றில் கலந்து கொண்டுள்ள 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

அசைக்க முடியாத மங்காத்தா


அஜீத்தின் ஐம்பதாவது படமான ‘மங்காத்தா’ ரிலீஸ் ஆகி இரண்டு வாரங்கள் கடந்து விட்ட நிலையிலும் அடுத்தடுத்து புதிய படங்கள் ரிலீஸ் ஆகி இருந்தாலும் தமிழ்நாடு முழுவது பாக்ஸ் ஆபீஸில் முதலிடத்திலேயே தொடர்ந்து இருந்து வருகிறது மங்காத்தா.
இப்படி ஒரு ஓப்பனிங்கை சமீபகாலத்தில் பார்க்கவில்லை என்று கோலிவுட்டை சேர்ந்த விநியோகஸ்தர்கள் பலரும் ‘மங்காத்தா’ படத்தின் ஓப்பனிங்க் பற்றி சொல்லியிருந்தது ஞாபகம் இருக்கலாம்.

விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடிக்கும் ‘நண்பன்’ ஆடியோ ரிலீஸ் எப்போது?


ஹிந்தியில் அபார வெற்றி பெற்ற ‘3 இடியட்ஸ்’ படத்தினை, தமிழில் ‘நண்பன்’ என்ற பெயரில் ரீமேக்கி வருகிறார் பிரமாண்ட இயக்குனரான ஷங்கர். இப்படத்தில் இலியானா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே இப்படத்தில் ஆடியோ ரிலீஸ் ஆகும் தேதி உத்தேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இணைய உலகில் மக்களால் அதிகளவு பயன்படுத்தப்படும் இன்டர்நெட் பிரவுசராக பயர்பொக்ஸ் இடம் பிடித்து வருகிறது.
இதன் வேகம், அடிக்கடி மேம்படுத்தப்படும் செயல்பாடு, அதிகமான எண்ணிக்கையில் வேகம் தரும் எளிய ஆட் ஆன் தொகுப்புகள், ஓப்பன் சோர்ஸ் முறை எனப் பல அம்சங்கள் இதனைப் பெரும்பாலான மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளன.
இவை மட்டுமின்றி பயர்பொக்ஸ் பிரவுசரிலேயே பல பயன்தரும் செயல்பாடுகள் தரப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

Monday, September 19

பேஸ்புக் தரும் புத்தம் புதிய வசதிகள்

Facebook தளம் என்பது இணையத்தில் உள்ள அனைவரும் பயன்படுத்தும் ஒரு முக்கிய தளம்.
தற்போது பேஸ்புக்கில் இன்னும் பல வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இப்போது புதிய இரண்டு வசதிகளை காணலாம்.
Friend Lists: இதன் மூலம் நாம் தேவையான நண்பர்களின் செய்திகளை மட்டும் படிக்க முடியும். இதற்கு நாம் செய்ய வேண்டிய ஒரே காரியம் நம் நண்பர்களை சரியான List க்குள் நாம் சேர்க்க வேண்டும்.
Facebook ஆனது Default ஆக சில லிஸ்ட் கொண்டு இருக்கும். உதாரணமாக பெங்களூர் என்று ஒரு லிஸ்ட் அமைந்து உள்ளது என நினைத்துக் கொள்வோம். இதன் மூலம் நான் பெங்களூரில் உள்ள நண்பர்களின் Status மட்டும் தனியாக பார்க்க முடியும். இது போலவே மற்ற எல்லாம். இவற்றை மாற்ற நினைத்தால் Listபக்கம் சென்று மாற்றலாம்.

எண் 2 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் - சந்திரன் (Moon) :


இந்த 2ம் எண்ணைப் பற்றி அனைத்து நூல்களும் மக்களை தேவையில்லாமல் பயப்படுத்துகின்றன. உண்மை அதுவன்று. பெரும் மரங்கள் சாய்ந்தாலும் நாணல் மட்டும் நிலைத்து நிற்கம். ஒவ்வொருவர் வாழ்விலும் புயல் (சோதனைகள்) என்பது நிச்சயம் ஏற்படும். அதற்கு எந்த எண்ணும் விதிவிலக்கல்ல. மற்ற எண்காரர்கள் துவண்டு விடும்போது இவர்கள் மட்டும் வாழ்க்கையின் சோதனைகளில் வளைந்து கொடுத்து, முன்னேறி விடுவார்கள். அம்பாளின் அருள் பெற்ற எண் இது.
பகலுக்கு இராஜா சூரியன் என்றால் இரவுக்கு ராணி சந்திரன். சூரியன் தந்தைகாரன் சந்திரன் மாதாகாரகன். எனவே இந்த எண்காரர்களிடம் பெண்மையும், மென்மையும் உண்டு. இவர்கள் ஓரளவு தடித்த தேகத்தினர்தாம். இதில் பிறந்த ஆண்கள் சுருட்டை முடியையும், பெண்கள் நீண்ட முடியையும் கொண்டவர்கள்.

கணணியில் எவ்வளவு நேரம் பணிபுரிந்தோம் என்பதனை அறிந்து கொள்வதற்கு

நாம் கணணியில் எந்த அப்ளிகேஷனில் பணிபுரிந்தாலும், விளையாட்டினை விளையாடினாலும், இணைய இணைப்பில் தளங்கள் பார்த்தாலும் மொத்த விபரங்களையும் எளிதில் அறிந்து கொள்ளலாம்.
அதுமட்டும் அல்லாமல் எந்த எந்த அப்ளிகேஷனில் எவ்வளவு நேரம் பணிபுரிந்தோம் என்பதனையும் துல்லியமான நேரம் முதற்கொண்டு அறிந்து கொள்ளலாம்.
6 எம்.பி.கொள்ளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். நீங்கள் இதனை நிறுவியதும் ஒரு விண்டோ ஓப்பன் ஆகும்.

ஏடிஎம் இயந்திரத்தின் கடவுச்சொற்களை அகச்சிவப்பு கமெராவின் மூலம் கண்டறியலாம்: விஞ்ஞானிகள் தகவல்

அகச்சிவப்பு கமெரா இருந்தால் போதும் ஏடிஎம் இயந்திரத்தில் நீங்கள் அழுத்துகிற எண்களை துல்லியமாக கண்டுபிடித்துவிட முடியும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
ஏடிஎம் கார்டுகளில் பல மோசடிகள் நடக்கின்றன. பிரத்யேக கருவிகள் மூலம் டூப்ளிகேட் போட்டு பணத்தை சுருட்டுகிறார்கள். இது உள்பட ஏடிஎம் முறைகேடுகள் தொடர்பான தொழில்நுட்ப ஆய்வு கூட்டம் அமெரிக்காவில் சமீபத்தில் நடந்தது.
சான்டியாகோ நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக அணியும் இதில் கலந்துகொண்டது. அகச்சிவப்பு கமெரா மூலம் கடவுச்சொல்லை திருட முடியும் என்பதை அவர்கள் விளக்கினர்.

நாள்தோறும் பால் அருந்தினால் பார்வை குறைபாடு ஏற்படாது: ஆய்வில் தகவல்

நியூயார்க் நகரில் அமைந்துள்ள பவலோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஏமி மில்லன் என்பவர் தலைமையில் வயது தொடர்பான பார்வை குறைபாடு பற்றி ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
பெரும்பாலும் 50 வயதினை நெருங்கும் பெண்களை பாதிக்கும் இக்குறைபாடு சாதாரணமாக செய்யும் வேலைகளான வாசித்தல், வாகனம் ஓட்டுதல் மற்றும் தெரிந்தவர்களின் முகத்தை அடையாளம் காணுதல் போன்றவற்றை கூட செய்ய இயலாத நிலைக்கு அவர்களை தள்ளி விடுகிறது.

Sunday, September 18

கைத்தொலைபேசியில் அனைத்து மொழிகளிலும் தகவல்களைப் பெற

இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் கைத்தொலைபேசியின் பயன்பாடு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
கைத்தொலைபேசியின் மூலமாக நாம் விரும்பும் மொழியில் நமக்கு தேவையான தகவல்களை தேடலாம். இதற்கு முதலில் நீங்கள் Opera mini browser ஐ பதிவிறக்கி கைத்தொலைபேசியில் நிறுவச் செய்ய வேண்டும்.

ஐ.சி.சி ஒருநாள் போட்டிக்கான தரவரிசை : டோனி முன்னேற்றம்

இந்திய கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி 6-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
9-வது இடத்தில் இருந்த தோனி, இங்கிலாந்து தொடரில் 236 ரன்கள் குவித்ததன் மூலம் 3 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தைப் பிடித்துள்ளார். விராட் கோலி 3 இடங்கள் பின்தங்கி 9-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
இங்கிலாந்து தொடருடன் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற ராகுல் திராவிட் 118-வது இடத்தைப் பிடித்தார். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் 128 ரன்கள் குவித்ததன் மூலம் அவர் 3 இடங்கள் முன்னேறினார். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஒருநாள் போட்டியில் விளையாடாததே தரவரிசையில் திராவிடின் பின்னடைவுக்கு காரணம். இந்தியாவின் சுரேஷ் ரெய்னா 5 இடங்கள் முன்னேறி 30-வது இடத்தைப் பிடித்தார்.
துடுப்பாட்டத்தில் தென் ஆப்பிரிக்காவின் ஹசிம் ஆம்லா, டிவில்லியர்ஸ், அவுஸ்திரேலியாவின் வாட்சன் ஆகியோர் முறையே முதல் 3 இடங்களை தக்கவைத்துக் கொண்டுள்ளனர். இங்கிலாந்தின் ஜொனாதன் டிராட், இலங்கையின் சங்ககராவை பின்னுக்கு தள்ளி, 4-வது இடத்துக்கு முன்னேறினார்.
பந்துவீச்சில் இங்கிலாந்தின் ஸ்வான் முதலிடத்திலும், நியூசிலாந்தின் டேனியல் வெட்டோரி 2-வது இடத்திலும், அவுஸ்திரேலியாவின் ஜான்சன் 3-வது இடத்திலும் உள்ளனர். பாகிஸ்தானின் முகமது ஹபீஸ் 23-வது இடத்துக்கு முன்னேற்றம் கண்டுள்ளார். இந்தியாவின் முனாப் படேல் 6 இடங்கள் பின்னடைவைச் சந்தித்து 33-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

Saturday, September 17

உடற்பயிற்சி செய்வதை விட சொக்லேட் சாப்பிடுவது நல்லது: விஞ்ஞானிகள் தகவல்

உடற்பயிற்சி செய்வதை விட சொக்லேட் சாப்பிடுவது நல்லது என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த ஆய்வில் சொக்லேட்டில் காணப்படும் mitochondria என்ற மூலப்பொருளில் தசைநார்களின் செயற்பாட்டைத் தூண்டக்கூடிய தன்மை உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இது அதிகளவில் காணப்பட்டால் அதிக சக்தியையும் உற்பத்தியாக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஓடுதல் மற்றும் சைக்கிளோடுதல் போன்ற உடற்பயிற்சிகளின் போது அதிகரிக்கப்படும் மூலப்பொருளும் இதுவாகத் தான் இருக்கிறது.

விண்டோஸ் 8ன் Developer Preview மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு

இணையத்தில் சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்ட விஷயம் தான் இந்த Windows 8 மென்பொருள். மைக்ரோசாப்ட் இந்த மென்பொருளை தற்பொழுது வெளியிட்டுள்ளது.
இந்த மென்பொருளில் பல வசதிகள் நிறைந்து உள்ளது. சமீபத்தில் தான் Windows7 மென்பொருளை வெளியிட்டது. அது கணணி உலகில் மிகுந்த வரவேற்பை பெற்று வருவாயை அள்ளி குவித்தது. அதற்குள் மேலும் பல வசதிகளை புகுத்தி Windows 8 மென்பொருளை வெளியிட்டுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம்.

விடைபெறும் திராவிட்டுக்கு சச்சின் புகழாரம்

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் ராகுல் திராவிட்டின் ஒருநாள் கிரிக்கெட் பயணம் மகத்தானது என்று மற்றொரு நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.
பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்த சச்சின் டெண்டுல்கர் மேலும் கூறுகையில்:
ராகுல் திராவிட் எங்களுக்கு எப்போதும் ஒரு ரோல் மாடலாகவே திகழ்கிறார் என்பதில் எனக்கு எந்த வித சந்தேகமும் இல்லை. ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது பங்களிப்புக்கு ஏற்ற பாராட்டுகள் கிடைக்கவில்லை என்பது வருத்தத்திற்குரியதே.

Friday, September 16

இரண்டு சூரியன்களை பெற்ற கிரகம் கண்டுபிடிப்பு

நமது பூமிக்கு ஒரு சூரியனும், ஒரு நிலாவும் உள்ளது. பகலில் சூரிய வெளிச்சத்தையும், இரவில் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரக்கூடிய நிலாவின் ஒளியையும் பெறுகிறோம்.
அமெரிக்காவைச் சேர்ந்த நாசா விண்வெளி மையத்தின் கெப்ளர் டெலஸ்கோப்பில் ஆய்வாளர்கள் ஆய்வு செய்த போது ஒரு புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர்.

Thursday, September 15

‘பில்லா 2’ படத்தில் ஒரு பாட்டுக்காக 25 நாள் படப்பிடிப்பு


‘மங்காத்தா’ படத்திற்குப் பிறகு அஜித்குமார் மும்முரமாய் நடித்து வரும் படம் ‘பில்லா 2’. இப்படத்தினை சக்ரி டோலட்டி இயக்கி வருகிறார். கதாநாயகியாக ஹூமா குரோஷி நடித்து வருகிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Wednesday, September 14

எண் 1 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் - சூரியன் (Sun) :

எல்லா எண்களுக்கும் இந்த ஒன்றாம் எண்ணே தலைமை வகிக்கிறது. நமது சூரியக் குடும்பத்தின் தலைவனான சூரியன்தான் இதனை ஆட்சி செய்கிறார். இந்த எண்ணில் பிற்தநவர்கள் பழகுவதற்கும், பார் வைக்கம் கம்பீரமானவர்கள். தன்னம்பிக்கை இவர்களிடம் அதிகம் இருக்கும். இவர்கள் மற்றவர்களைக் கடுமையாக வேலை வாங்குவார்கள். ஆனால் அதே சமயம் மனித நேயத்துடனும் அவர்களுடன் நடந்த கொள்வார்கள். மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள். தங்களின் பிரச்சினைகளைக் கூடத் தாங்களே சமாளித்துக் கொள்ளும் திறமையுடையவர்கள். அடுத்தவர்களுடன் விவாதித்தால் கௌரவம் போய்விடும் என்று நினைப்பவர்கள்.

ரஜினிக்கு வில்லனாகி அவர் கையில் அடி வாங்க வேண்டும் – தலயின் ஆசை


ஒரு படத்திலாவது சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வில்லனாகி, அவர் கையால் அடிவாங்க வேண்டும். அன்றுதான் என் சினிமா பயணம் பூர்த்தியடையும், என்று நடிகர் அஜீத் தெரிவித்துள்ளார்.

ரஜினியின் மிகப்பெரிய ரசிகர், ரஜினியை கடவுளாகவே போற்றுபவர் நடிகர் அஜீத். ரஜினியைப் போலவே சினிமாவில் தனக்கென தனித்த கொள்கைகளை வைத்திருப்பவர். 

கிரிக்கெட்டின் அசிங்கமான பகுதியை பார்த்து விட்டதாக தோணி புலம்பல்

இங்கிலாந்துத் தொடரில் ஒரு போட்டியில் கூட ஜெயிக்க முடியாமல் போய் விட்ட கேப்டன் டோணி, நேற்று முடிந்து போன 4வது ஒரு நாள் போட்டி குறித்து விரக்தியுடன் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். கிரிக்கெட்டின் அசிங்கமான பகுதியையும் நான் பார்த்து விட்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார். 

கள்ளத்தொடர்பு நயன்தாரா வைத்திருந்தால் குற்றமில்லை, நிகிதாவுக்கு மட்டும் என் ஓரவஞ்சனை?

அந்தரங்க வாழ்க்கையில் ஒழுக்கம் முக்கியம் என்று கன்னட தயாரிப்பாளர்கள் சங்கம் பிரகடனம் செய்திருப்பதை கேட்டு அதிர்ந்து போயிருக்கிறது திரையுலகம். அதிர்ச்சியிலா ஆனந்தத்திலா என்பது உடனடியாக தெரியவில்லை. நடிகர் தர்ஷனின் குடும்ப சண்டையால் விளைந்த ஞானோதயம் அந்த அறிவிப்பு. உடன் நடிக்கும் கதாநாயகி நிகிதாவுடன் தர்ஷன் நெருக்கமாக பழகுவதை மனைவி விஜயலட்சுமி கண்டிக்க, வாக்குவாதம் வலுத்திருக்கிறது.

தர்ஷன் துப்பாக்கியை காட்டி தன்னையும் குழந்தையையும் மிரட்டியதாக போலீசில் புகார் கொடுத்தார் மனைவி. மகளிர் அமைப்புகள் அழுத்தம் கொடுத்ததால் தர்ஷன் கைதானார். தலைசுற்றுவதாக சொன்ன அவரை ஸ்பெஷல் வார்டில் சேர்த்துள்ளனர். அங்கு கணவனை பார்த்து பேசிய விஜயலட்சுமி, புகாரை வாபஸ் பெற்றிருக்கிறார். பின்னர் கர்நாடக தயாரிப்பாளர்கள் சங்கம் அவசரமாக கூடி, நிகிதா மூன்று ஆண்டுகள் கன்னட படங்களில் நடிக்க தடை விதித்து தீர்மானம் போட்டுள்ளது.

நயன்தாரா தான் எனக்கு முன்னோடி : அமலா பால் பெருமிதம்!!


சினிமாவில் நயன்தாரா தான் எனக்கு முன்னோடி என்று நடிகை அமலா பால் பெருமிதம் கொண்டுள்ளார். மலையாள வரவான அமலாபால், மைனா, தெய்வத்திருமகள் என்று அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகை ரேஞ்ச்க்கு உயர்ந்து வருகிறார். இதுதவிர தெலுங்கில் சில படங்களிலும் கமிட் ஆகியுள்ளார்.

Tuesday, September 13

விண்டோஸ் லோகோ கீயின் பயன்பாடுகள்

விண்டோஸ் ஓபரேட்டிங் சிஸ்டத்தில் அதன் சின்னத்துடன் ஒரு கீ, விசைப்பலகையில் தரப்பட்டிருக்கும்.
இதனைத் தனியாகவும், மற்ற கீகளுடனும் இயக்கி சில செயல்பாடுகளை மேற்கொள்ளலாம். கீழே அந்த ஷார்ட்கட் கீகளும் அவற்றிற்கான செயல்பாடுகளும் தரப்பட்டுள்ளன.
இவற்றில் சிலவற்றை நீங்கள் அடிக்கடி மேற்கொள்ளும் சூழ்நிலைகளும் உங்கள் செயல்பாட்டில் இருக்கலாம்.

ரசிகர் மன்றத்தை கலைத்தது ஏன்? அஜீத் விளக்கம்

நடிகர் அஜீத்குமார் தனது ரசிகர் மன்றங்களை கடந்த மே மாதம் கலைத்துவிட்டார். அஜீத் அரசியலுக்கு வருவார் என எதிர்ப்பார்த்துக் காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு மன்றத்தை அஜீத் கலைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனாலும் “மங்காத்தா” படத்துக்கு பேனர்கள், கொடி தோரணங்கள் கட்டி கொண்டாடினார்கள். ரசிகர் மன்றத்தை கலைத்தது ஏன் என்பது பற்றி அஜீத் விளக்கம் அளித்துள்ளார்.