Find us on Facebook

Wednesday, September 28

வந்தான் வென்றான் திரை விமர்சனம்

 ஜீவாவிடம் உயிரோடு ஊருக்கு ஓடிப்போ என நந்தா கோஷ்டி மிரட்ட போலீசிடம் பிடித்து கொடுக்காமல் போக மாட்டேன் என அவர் அடம் பிடிக்க சூடு பிடிக்கிறது. நந்தாவை வீழ்த்த தந்திரமாய் காய் நகர்த்துகிறார். போலீசை வைத்து தொழில் நிறுவனங்களை மூட வைத்து நிராயுதபாணியாக்குகிறார்.

 
இதனால் ஜீவாவை கொல்ல நந்தா வெறியாகிறார். இருவரும் நேரடியாக மோதுகின்றனர். வெல்வது யார்? என்பது கிளைமாக்ஸ்... அப்பாவித்தனம், ஆக்ரோஷம், காதல் என சுழன்றடிக்கிறார் ஜீவா. ஊரே நடுங்கும் தாதாவிடம் காதலிக்காக போலீசில் சரண்டர் ஆகச் சொன்னதும் அடுத்து என்னவாகுமோ என்ற எதிர்பார்ப்பு எகிறுகிறது.
 
குத்துச்சண்டை வீரனாகும் லட்சியத்தை காதலிக்காக விடுவதில் ஆரம்பித்து டாப்சியுடனான காதல் கதையை சொல்லும் பிளாஷ்பேக் ரசனை. தாதா கூட்டத்தில் சமையல்காரராக இருக்கும் சந்தானத்துடன் சேர்ந்து அடிக்கும் லூட்டி கலகலப்பு. கிளைமாக்ஸ் சண்டையில் பொறி. நந்தா வில்லத்தனத்தில் முறைப்பு காட்டுகிறார்.
 
இன்னொருத்தன் மனைவியான தனது காதல் தற்கொலையாவது அவன் குழந்தையை எடுத்து வளர்ப்பது அழுத்தமான பதிவுகள். கிராமத்தில் உளவுக்காரர்களிடையே நடக்கும் அன்பு, பகை உணர்ச்சி வகையறாக்கள் வலுவானவை. டாப்சி அழகாய் வந்து போகிறார். சிங்கமுத்து, அழகம் பெருமாள், மாளவிகா கேரக்டர்களும் நேர்த்தி.
 
ஆக்ஷன், காதல், சென்டிமென்ட்டில் காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்தி படத்தோடு ஒன்ற வைக்கிறார் இயக்குனர் கண்ணன். பயங்கர தாதா தன்னை போலீசில் பிடித்து கொடுக்க வருவபவனிடம் மென்மை போக்கை காட்டுவதும்...
 
காதல் கதையை கேட்பதும் ஒட்டவில்லை.
 
தமன் பின்னணி இசையில் பாடல்கள் ஈர்க்கின்றன.
 
பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவில் பிரமாண்டம்.

No comments:

Post a Comment