வயதாகிவிட்டது என்றாலே முகத்தில் சுருக்கங்கள் தோன்றுவது இயற்கையான ஒன்று. ஆனால் தற்போது சிறு வயதிலேயே சிலருக்கு தோல் சுருக்கம் ஏற்பட்டு வயதான தோற்றத்தைத் தருகிறது.
இதற்கு காரணம் கோபப்படுவது தான். கோபத்தைக் குறைத்துக் கொண்டால் முகத்தில் விரைவில் சுருக்கம் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். மேலும் சிலருக்கு போதிய சத்து தோலில் இல்லாததாலும் சுருக்கம் ஏற்படுகிறது. இத்தகைய முகச்சுருக்கத்தை நீக்க சில வழிகள் உள்ளன.
