ஐ.பி.எல் 5 தொடரில் 16 லீக் ஆட்டங்களில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருந்தது. இதனால் சென்னை அணியின் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு கேள்விக் குறியாகவே இருந்தது.
ஏனெனில் ராஜஸ்தான் றொயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், பெங்களூர் றொயல் சேலஞ்சர்ஸ் ஆகிய அணிகள் சென்னை அணி அடுத்த சுற்றுக்கு நுழைவதற்குப் போட்டியாக இருந்தன.
ஆனால் அந்த மூன்று அணிகளுமே முக்கியமான ஆட்டங்களில் தோல்வியடைந்ததால், சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது.
சென்னைக்குப் போட்டியாக இருந்த ராஜஸ்தான், பெங்களூர் ஆகிய அணிகளை புள்ளிகளில் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த டெக்கான் வெற்றி பெற்றது.
இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிர்ஷ்டம் என்றும் கூட கூறலாம். இதேபோல டெல்லியிடம் தோல்வியடைந்ததன் மூலம் பஞ்சாப் அணி போட்டியில் இருந்து வெளியேறியது.
தற்போதைய நிலையில் புள்ளிகள் பட்டியலில் சென்னை அணியும், பெங்களூர் அணியும் தலா 17 புள்ளிகளில்தான் உள்ளன. எனினும் ரன் ரேட் அடிப்படையில் சென்னை அணி புள்ளிகள் பட்டியலில் 4வது இடத்தை தக்கவைத்து, அடுத்த சுற்றுக்கும் முன்னேறியுள்ளது.
2008ம் ஆண்டு முதல் ஐ.பி.எல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது வரை 5 ஐ.பி.எல் போட்டிகளிலும் சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. இதில் கடந்த இரு ஆண்டுகளில் ஐ.பி.எல் சாம்பியன் பட்டமும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment