Find us on Facebook

Friday, September 30

நள்ளிரவில் '7ஆம் அறிவு' ட்ரெய்லர்

வெற்றிக்குதிரையில் சவாரி செய்யும் ஏராளமான சினிமாக்காரர்களுக்கு ராத்திரி பனிரெண்டு மணிக்கு மேல்தான் விடியும். ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், சிம்பு என லிஸ்ட் போட்டால் பட்டியலின் நீளம் தாங்காது. தமிழ் சினிமாவில் இப்படி ஏராளமான இரவு பறவைகள் இருக்கிறார்கள். தானும் அப்படி ஒரு இரவு பறவைதான் என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்
. இவரது தயாரிப்பில் உருவான '7ஆம் அறிவு' படத்தின் ட்ரெய்லரை தனது ஃபேஸ்புக், ட்விட்டர் மூலம் நள்ளிரவில்தான் வெளியிட்டிருக்கிறார் அவர். (நம்ம ஊருக்கு இது வேணும்னா நைட்டு, வெளிநாட்டு ரசிகர்களுக்கு இதுதானே பிரைட்டு) சரி போகட்டும்.... இந்த ட்ரெய்லரை வெளியிட ஏன் இத்தனை தாமதம்? பாடல் வெளியீட்டு விழாவன்றே வெளியிட்டிருக்கலாமே? அங்குதான் சிக்கலே. ட்ரெய்லரில் ஒரு நாய்க்கு ஊசி போடுவது போல ஒரு காட்சி வருகிறது. இதை தணிக்கை அதிகாரிகள் நீக்கினாலே போச்சு என்றார்களாம். இந்த ட்ரெய்லரின் ஜீவனே அதுதான். அதை எப்படி நீக்குவது என்றாராம் முருகதாஸ். சரக்கென்று முடிய வேண்டிய இந்த பேச்சுவார்த்தை, அவ்வளவு எளிதில் முடியாமல் பே...ச்...சு... வா..ர்...த்...தை என்று இழுத்துக் கொண்டே போனதால்தான் இத்தனை தாமதம்? சரி முடிவு என்ன? அந்த ஊசி போடுகிற காட்சியின் அளவு வினாடி நேரத்தில் மறைந்துவிடுவது போல மாற்றிய பின்புதான் சம்மதித்தார்களாம். அது சரி... படத்தயும் மிட்நைட்ல ரிலீஸ் பண்ணிடாதீங்கப்போய்........

No comments:

Post a Comment