Find us on Facebook

Friday, September 23

எங்கேயும் எப்போதும்

விபத்தில் உயிரிழப்போரின் வாழ்க்கை பின்புலங்களை உருக்கமாய் அலசும் கதை...
 
திருச்சியில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஜெய், எதிர் வீட்டு அஞ்சலிக்கு காதல் வலை வீசுகிறார். அவரும் சம்மதம் சொல்கிறார். பெற்றோரிடம் அஞ்சலியை அறிமுகப்படுத்த அழைத்துக் கொண்டு பஸ்சில் விழுப்புரம் புறப்படுகிறார்.
 
அதே பஸ்சில் திருச்சிக்கு காதலியை தேடி வந்து கண்டு பிடிக்க முடியாத சர்வாவும் சென்னை திரும்புகிறார். சென்னையில் இருந்து திருச்சி செல்லும் பஸ்சில் அனன்யா காதலன் சர்வாவை தேடி வந்து கண்டுபிடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திருச்சிக்கு பயணிக்கிறார். இரு பஸ்களிலும் வெவ்வேறு ஆசை, ஏக்கம், கனவுகளுடன் நிறைய பயணிகள்.
 
அந்த பஸ்கள் ஒரு இடத்தில் நேருக்கு நேர் மோதி நொறுங்குகின்றன. அதில் பலியானவர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களின் கனவுகள் எவ்வாறு சிதைகின்றன என்பது உயிரை கரைக்கும் கிளைமாக்ஸ்... ஜெய் காதல் அப்பாவியாக பளிச்சிடுகிறார். மாடியில் நின்று எதிர்மாடி வீட்டு அஞ்சலிக்கு சைகையால் காதல் சமிக்ஷைகள் அனுப்புவது ரசனை.
 
அஞ்சலி திடும் என ஜெய் அறைக்கு வந்து என்னை காதலிக்கிறாயா? என எகிறுவது பிறகு தனது தந்தை, ஒரு தலையாக காதலிக்கும் இளைஞன் போன்றோரிடம் அனுப்புவது, எய்ட்ஸ் டெஸ்ட் என சோதனைகள் நடத்தி ஜெய்யை காதலனாக தேர்வு செய்வது, கலகலப்பானவை.
 
கம்ப்யூட்டர் நிறுவனத்தில் நேர்முக தேர்வுக்காக சென்னை வந்து வழி தெரியாமல் தவிக்கும் அனன்யாவுக்கு உதவும் சர்வா பஸ், ஆட்டோ என ஏறி அவர் பின்னால் அலைந்து அனுதாபம் அள்ளுகிறார். துணையாய் வரும் சர்வா மேல் அனன்யா வீசும் சந்தேகப்பார்வைகள் சிரிப்பு.
 
பிறந்த ஐந்து வயதாகும் குழந்தையை முதல் தடவையாக பார்க்க வரும் தந்தை, பஸ்சுக்குள் மேதாவித்தனம் பேசும் குழந்தை, விளையாட்டு போட்டியில் வென்று கோப்பை வாங்கி மகிழ்ச்சி யோடு பயணிக்கும் மாணவிகள்.
 
மனைவியை தாய்வீடு அனுப்ப மனமின்றி அவளுடனேயே அன்பை கொட்டி பயணிக்கும் கணவன், பஸ் சுக்குள்ளேயே காதல் தீ பற்றிக் கொள்ள பார்வைகள் பரிமாறும் இளம்ஜோடி என பஸ்சில் பயணிக்கும் பயணிகளின் மன ஓட்டங்கள் ஜீவனாய் காட்சிபடுத்தப்பட்டு உள்ளது.
 
விபத்தில் ரத்தம் சதையு மாய் பிய்த்து எறியப்படும் அவர்களின் முடிவுகள் இதயத்தை விம்மச் செய்கிறது. வித்தியாசமான கதை களத்தில் காட்சிகளை உயிரோட்டமாக நகர்த்துகிறார் இயக்கு னர் சரவணன். ஆரம்ப சீன்களில் யார் எந்த ஊர் பஸ்சில் பயணிக்கிறார்கள் என்பதை கணிக்க நெடு நேரம் எடுத்துக்கொள்ள வேண்டிய குழப்பம்.
 
விபத்து செய்யும் ஓட்டுநர்களின் கவனக் குறைவுகளை இன்னும் அழுத்தமாக காட்சிப்படுத்தி இருக்கலாம். வேல்ராஜ் ஒளிப்பதிவும் சத்யா பின்னணி இசையும் கைகோர்த்து தூக்கி நிறுத்துகின்றன.

No comments:

Post a Comment