Find us on Facebook

Tuesday, September 20

ஒருநாள் போட்டி தரவரிசை: இந்தியா 5-வது இடத்துக்கு பின் தங்கியது


இந்திய கிரிக்கெட் அணியின் இங்கிலாந்து பயணம் மிகவும் மோசமாக அமைந்தது. 4 டெஸ்டிலும் தோற்றதால் இந்திய அணி “நம்பர்1” இடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு பின்தங்கியது. தற்போது ஒருநாள் போட்டி தரவரிசையிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்தது.
 
இதனால் உலக சாம்பியனான இந்தியா 3-வது இடத்தில் இருந்து 5-வது இடத்துக்கு பின் தங்கியது. 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தான் இந்தியா தரவரிசையில் பின்தங்கி இருந்தது. தற்போது அந்த நிலைக்கு மீண்டும் திரும்பிவிட்டது. ஆஸ்திரேலியா 130 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இலங்கை 119 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், தென்ஆப்பிரிக்கா 116 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளன. இந்தியாவுக்கு எதிரான தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியதால் இங்கிலாந்து 113 புள்ளிகளுடன் 4-வது இடத்துக்கு முன்னேறியது.
 
இந்தியா 112 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் (101 புள்ளிகள்) 6-வது இடத்தி லும், நியூசிலாந்து 7-வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் 8-வது இடத்திலும், வங்காளதேசம் 9-வது இடத்திலும், ஜிம்பாப்வே 10-வது இடத்திலும், அயர்லாந்து 11-வது இடத்திலும், நெதர்லாந்து 12-வது இடத்திலும், கென்யா 13-வது இடத்திலும் உள்ளன.

இது http://www.maalaimalar.கம என்ற இணைய தளத்தில் இருந்து பிரதி எடுக்கப்பட்டது

No comments:

Post a Comment