இலங்கை அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. மூன்று டெஸ்ட் கொண்ட தொடரை தென்ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் ஏற்கனவே வென்றது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, முதல் ஒரு நாள் போட்டி இன்று பகல் இரவு போட்டியாக தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங்கை தேர்வு செய்தது .
இதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 301 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஆம்லா அதிகபட்சமாக 112 ரன் எடுத்தார். இலங்கை அணியின் சார்பில் மலிங்கா 4 விக்கெட்டை வீழ்த்தினார்.
302 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆட தொடங்கிய இலங்கை அணியின் முக்கிய வீரர்கள் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். அந்த அணியில் அதிகபட்சமாக குலசேகரா 19 ரன்கள் எடுத்தார். இறுதியில் இலங்கை அணி 20 .1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 43 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா அணியின் ஆல்பி மோர்கல் 4 விக்கெட்டை வீழ்த்தினார்.
No comments:
Post a Comment